< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாடான சிலியில் லித்தியம் உற்பத்தியின் பெரும்பங்கை கையில் எடுக்கும் அரசாங்கம்
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடான சிலியில் லித்தியம் உற்பத்தியின் பெரும்பங்கை கையில் எடுக்கும் அரசாங்கம்

தினத்தந்தி
|
22 April 2023 10:55 PM IST

சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் லித்தியம் உற்பத்தியில் பெரும்பான்மையான பங்குகளை அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகின்றன. எனவே லித்தியத்தின் தேவை எதிர்காலத்தில் அதிகமாக தேவைப்படும் என்பதால் அதற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்த லித்தியம் பேட்டரி உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான சிலி இரண்டாவது இடத்திலும், கையிருப்பில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில் சிலி நாட்டின் அதிபர் கேப்ரியல் போரிக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும்போது, லித்தியம் உற்பத்தியில் பெரும்பான்மையான பங்குகளை அரசு எடுக்க வேண்டும் என்றும், இந்த உலோகத்தை எடுப்பதில் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் கூட்டு சேர வேண்டும் என்றும் தெரிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பானது அங்குள்ள தொழில்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது லித்தியம் உற்பத்தியில் உள்ள போட்டி தன்மையை பாதிக்கும் என அங்குள்ள ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்