< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி
|30 April 2024 7:24 AM IST
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
3 மணிநேரத்திற்கு மேல் நீடித்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர். 5 போலீசார் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து, தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.