< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சந்திரயான்-3 குழுவுக்கு அமெரிக்காவில் விருது
|10 April 2024 4:27 AM IST
சந்திரயான்-3 குழு விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல். 'ஜாக்' ஸ்விகர்ட் ஜூனியர் விருதைப் பெற்றது.
வாஷிங்டன்,
சந்திரயான்-3 விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவில் கொலரோடாவில் வருடாந்திர விண்வெளி கருத்தரங்கம் நடந்தது. அதில், விண்வெளி ஆராய்ச்சிக்காக, சந்திரயான்-3 திட்ட குழுவுக்கு மிகவும் மதிப்புவாய்ந்த ஜான் எல்.'ஜேக் ஸ்விகெர்ட் ஜூனியர் விருது வழங்கப்பட்டது.
அந்த விருதை 'இஸ்ரோ' சார்பில் ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய துணை தூதர் டி.சி.மஞ்சுநாத் பெற்றுக்கொண்டார்.