< Back
உலக செய்திகள்
பயனாளர்களின் தகவல்களை கசிய விட்டதாக வழக்கு - ரூ.6,000 கோடி அபராதம் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புதல்
உலக செய்திகள்

பயனாளர்களின் தகவல்களை கசிய விட்டதாக வழக்கு - ரூ.6,000 கோடி அபராதம் செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புதல்

தினத்தந்தி
|
24 Dec 2022 11:15 AM GMT

பயனாளர்களின் தகவல்களை அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வாஷிங்டன்,

கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய்) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயனாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்