< Back
உலக செய்திகள்
அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கு; இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மறுப்பு
உலக செய்திகள்

அரசு ரகசியங்களை வெளிப்படுத்திய வழக்கு; இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்க இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
28 Oct 2023 3:50 AM IST

‘சைபர்’ வழக்கில் ஜாமீன் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உதவியாளர் முகமது குரேஷி ஆகியோர் மீது அரசு ரகசியங்களை வெளிப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 'சைபர்'(Cipher) வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கின் விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

ஏற்கனவே 'தோஷகானா' வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 'சைபர்' வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு இம்ரான் கான் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்