< Back
உலக செய்திகள்
பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
15 April 2023 10:27 PM IST

பிரான்சில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் போர்டோக் நகரில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 4 பேர் பயணம் செய்தனர். இந்த கார் அங்குள்ள டார்கெட் வீதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த கார் மோதியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார் டிரைவர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்