< Back
உலக செய்திகள்
அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு எதிரொலி: கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம் - கனடா  அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூடு எதிரொலி: கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம் - கனடா அதிரடி அறிவிப்பு

தினத்தந்தி
|
31 May 2022 6:08 AM IST

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு எதிரொலியக, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை முடக்கம் செய்ய உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

ஒட்டாவா,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு சட்டமாகிவிட்டால், கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்