< Back
உலக செய்திகள்
வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக பெண் நியமனம்
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக பெண் நியமனம்

தினத்தந்தி
|
5 July 2024 4:20 AM IST

கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டவா,

கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.

தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, 'நேட்டோ மிஷன் ஈராக்'கை வழிநடத்தினார்.

மேலும் செய்திகள்