< Back
உலக செய்திகள்
கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரிக்க குழு

கோப்புப்படம்

உலக செய்திகள்

கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரிக்க குழு

தினத்தந்தி
|
17 March 2023 3:19 AM IST

கனடா பொதுத்தேர்தலில் சீனாவின் தலையீடு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா,

கனடாவில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சி தற்போது நடந்து வருகிறது. இங்கு கடந்த 2 முறை நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் சீனாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதாவது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும், அதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் உளவுத்துறை அறிக்கை தெரிவித்தது. இந்த சம்பவம் கனடா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தின.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முன்னாள் கவர்னர் டேவிட் ஜான்ஸ்டன் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

மேலும் செய்திகள்