< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
2050-க்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக கம்போடியா மாறும் - பிரதமர் ஹன் மானெட் உறுதி
|25 Aug 2023 1:50 AM IST
2050-க்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக கம்போடியா மாறும் என அந்நாட்டு பிரதமர் ஹன் மானெட் தெரிவித்தார்.
புனோம் பென்,
கம்போடியாவில் கடந்த மாதம் 23-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் கம்போடிய மக்கள் கட்சி மகத்தான வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் பிரதமராக ஹன் மானெட் பதவியேற்றார். இதனையடுத்து அங்குள்ள நாடாளுமன்றத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் பென்டகோனல் வியூகம்-1 என்ற ஒரு திட்டத்தை பிரதமர் ஹன் மானெட் அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த திட்டமானது நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 2050-ம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட நாடாக கம்போடியாவை மாற்ற தேசிய வளர்ச்சியை துரிதப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.