< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்று திரும்பியபோது பஸ் கவிழ்ந்து விபத்து
|21 Jan 2023 7:45 PM IST
இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் செய்ன்றவர்கள் பயணித்த பஸ் கவிந்து விபத்துக்குள்ளானது.
காத்மண்டு,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் திரிவேனி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பினர்.
இந்திய-நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்ற பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 70 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நேபாள மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.