< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பெரு நாட்டில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்து - 24 பேர் உயிரிழப்பு
|20 Sept 2023 2:49 AM IST
விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 24 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லிமா,
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூகான்சாயோவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்தது. இதனால் நிலைதடுமாறி மலைப்பாதையில் உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் சிக்கி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 24 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.