< Back
உலக செய்திகள்
வங்கதேசத்தில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 14 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

வங்கதேசத்தில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 14 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
16 April 2024 5:49 PM IST

லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

தாக்கா,

வங்கதேசத்தின் பரீத்பூர் பகுதியில் உள்ள தாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் இன்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்