< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
எகிப்தில் லாரி மீது பஸ் மோதி விபத்து - 17 பேர் உயிரிழப்பு; 29 பேர் படுகாயம்
|5 May 2023 4:21 AM IST
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
கெய்ரோ,
எகிப்து நாட்டின் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் இருந்து தலைநகர் கெய்ரோவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர். இந்த பஸ் தென்மேற்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது.
இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.