< Back
உலக செய்திகள்
பட்ஜெட் இடிக்கிறது; குழந்தையின் மெனுவில் பூச்சி வறுவல், புரத பொடிகளை சேர்த்த தாய்
உலக செய்திகள்

பட்ஜெட் இடிக்கிறது; குழந்தையின் மெனுவில் பூச்சி வறுவல், புரத பொடிகளை சேர்த்த தாய்

தினத்தந்தி
|
26 April 2023 7:02 PM IST

கனடாவில் மாத பட்ஜெட் இடிக்கிறது என்பதற்காக ஒன்றரை வயது குழந்தைக்கு அவரது தாய் பூச்சிகளை உணவாக அளித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.

டொரண்டோ,

கனடா நாட்டில் உணவு பற்றிய எழுத்தாளராக இருப்பவர் டிப்பானி லெய்க். சரிவிகித உணவு, ஊட்டச்சத்து போன்றவற்றை பற்றி இவர் எழுதி வருகிறார். டிப்பானிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தனது குழந்தைக்கு கிரிக்கெட் எனப்படும் ஒரு வகை சிறிய பூச்சிகளை உணவாக கொடுக்கிறேன் என கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளார்.

அவர் கூறும்போது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரிய அளவில் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு விட்டது. விலைவாசி உயர்ந்தபோதும், வருவாய் உயரவில்லை.

அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்திற்கு போய் விட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், உயிர் வாழ என்ன வழிகள் உள்ளனவோ அந்த மாற்றங்களை எல்லாம் குடும்பங்கள் மேற்கொண்டு வருகின்றன.

உணவு எழுத்தாளராக எண்டோமோபேகி (பூச்சிகளை சாப்பிடுவது) உள்பட ஒவ்வொரு விசயத்திலும் நான் முயற்சி செய்திருக்கிறேன். சிலந்தி பூச்சியின் கால்களை வறுவல் செய்தும், தேளை குச்சியில் சொருகியபடியும் என ஒவ்வொன்றையும் சுவைத்திருக்கிறேன்.

அதனுடன், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டுக்கு சென்றபோது கிரிக்கெட் பூச்சிகள், எறும்புகளையும் கூட உண்டு மகிழ்ந்திருக்கிறேன். சுவையை திருப்திப்படுத்த எப்படி இதுபோன்ற டிஷ்களை எல்லாம் அவர்கள் செய்து சிறப்பாக்குகிறார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தேன் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.

அவர், தெரிந்தே தனது குழந்தைக்கு பூச்சிகளை உணவாக கொடுக்கும் முடிவை எடுத்தேன் என கூறுகிறார். ஒரு வார உணவுக்கான மளிகை பில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது.

அதனை ஈடு செய்ய, பொறித்த பூச்சிகள், பூச்சிகளின் புரத பவுடர், முழுவதும் வறுத்த பூச்சிகள் ஆகியவற்றை பண்ணைகளில் இருந்து வாங்குகிறேன். இதனால், வாரத்திற்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை மிச்சப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்