< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம்
|19 Oct 2023 9:54 AM IST
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம் மேற்கொள்கிறார்.
லண்டன்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்று, நேதன்யாகுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் இன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.