< Back
உலக செய்திகள்
தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
உலக செய்திகள்

தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

தினத்தந்தி
|
9 Nov 2023 10:33 AM IST

தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

லண்டன்,

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இந்த விழாவில், இங்கிலாந்தில் வசிக்கும் இந்து சமூதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர். இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில், புகைப்படங்களை பகிர்ந்து, உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இவர் பெங்களூருவில் இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தி- சுதாமூர்த்தி தம்பதியின் மகளான அக்ஷதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்