பிரிட்டன்: ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு!
|பிரிட்டனில் ஒரு டிகிரி செல்சியஸ் குளிரில் ஏரியில் விழுந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
லண்டன்,
பிரிட்டனில் நிலவும் கடும் குளிரில் வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவும் பனிமழையும் அதிகரித்துள்ளது. லண்டன் நகரில் தரையடி ரயில்சேவை ஆங்காங்கே நிறுத்தப்படும் அல்லது தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கதகதப்புக்கு அவசியமான குளிர்கால அவசரப் பயன்பாட்டு நிலக்கரி ஆலைகளை இயக்க திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரயில்சேவை நிறுவனங்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இந்த நிலையில், மத்திய இங்கிலாந்தின் சோலிஹல் பகுதியில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பல சிறுவர்கள் விழுந்துள்ளனர். அவர்களில் நான்கு பேரை அவசர சேவைப் பிரிவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஒரு சிறுவன் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறான். சிறுவர்கள் விழுந்து இறந்துபோன ஏரிக்கருகே அந்த வட்டார மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.