< Back
உலக செய்திகள்
பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை

கோப்புப்படம்

உலக செய்திகள்

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை

தினத்தந்தி
|
12 May 2023 3:07 AM IST

பிரேசிலில் போலி செய்தி மசோதா நிறைவேற்றப்பட்டால் அந்நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக டெலிகிராம் தெரிவித்துள்ளது.

பிரேசிலியா,

உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரேசில் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு, அச்சுறுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக டெலிகிராம் செயலி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தவறான பதிவுகளை டெலிகிராமில் இருந்து நீக்க வேண்டும். தவறும்பட்சத்தில் டெலிகிராம் செயலியை பிரேசிலில் 72 மணி நேரம் முடக்க போவதாகவும், மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டெலிகிராம் நிறுவனம் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டெலிகிராமில் ஒரு பதிவு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பிரேசிலில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. எனவே அங்கு போலி செய்தி மசோதா நிறைவேற்றப்பட்டால் பிரேசிலை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்