< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிரேசில்: கடலில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி
|24 Jan 2024 4:15 AM IST
கடலோர போலீசார் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
பிரேசிலியா,
பிரேசில் நாட்டின் பாகியா மாகாண கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. படகானது சால்வடாரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்த 6 பேரை மீட்டனர்.
இருந்த போதிலும் இதில் 6 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மேலும் சிலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுலா பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிய வந்துள்ளது.