< Back
உலக செய்திகள்
சோமாலியாவில் குண்டுவெடிப்பு - மந்திரி உள்பட 14 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டுவெடிப்பு - மந்திரி உள்பட 14 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
18 July 2022 12:11 AM GMT

சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மந்திரி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

மொகடிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.

இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹிர்ஷபெல்லி மாகாணம் ஜவ்ஹர் நகரில் உள்ள தனியார் ஒட்டல் அருகே இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாகுதலில் ஹிர்ஷபெல்லி மாகாண சுகாதாரத்துறை மற்றும் பெண்கள் விவகாரங்கள் துறை மந்திரியும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலிக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்