< Back
உலக செய்திகள்
நைஜீரியாவில் குண்டு வெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு
உலக செய்திகள்

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Jan 2023 10:27 PM IST

நைஜீரியாவில் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது

நைஜீரியா.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்ன் நசரவா மற்றும் பெனியூ மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள ருகுபி என்ற கிராமத்தில் மக்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இன மற்றும் மத சண்டைகள் அதிகம் நிகழும் இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏராளமான கால்நடைகள் பலியானதுடன் பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த வெடிகுண்டு விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்