< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் படகு தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

தினத்தந்தி
|
13 Oct 2024 5:26 AM IST

காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது.

ஜகர்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு தீவில் பெனி லவோஸ் மாகாணத்தில் கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. கவர்னர் வேட்பாளரான பென்னி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள பகுதிகளுக்கு படகில் சென்று பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த படகில் தீப்பிடித்தது.

காற்றின் வேகம் காரணமாக படகு முழுவதும் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் படகு தீக்கிரையாகி சாம்பலானது. இந்த விபத்தில் படகில் இருந்த 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்