< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானங்கள் தரையிறக்கம்
|14 Aug 2023 1:46 AM IST
வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
டாக்கா,
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானத்தின் மீது ஒரு பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து அந்த இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.