< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஐரோப்பாவில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு - ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல்
|21 Oct 2022 9:54 PM IST
37 ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்,
சுவீடன் நாட்டைத் தலைமையகமாக கொண்ட ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 3,573 பறவைகளுக்கும், 2,464 கால்நடைகளுக்கும் பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று நோய் 37 ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல ஐரோப்பிய நாடுகளில் கோழி மற்றும் முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.