< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காசாவுக்கான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும் - இஸ்ரேலிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்
|30 Oct 2023 3:29 AM IST
பொதுமக்களைப் பாதுகாக்கவும், காசாவுக்கான உதவிகளை அதிகரிக்கவும் இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
வாஷிங்டன்,
காசாவில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நேற்று நடந்த தொலைப்பேசி அழைப்பின் போது, காசாவில் உள்ள பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதாபிமான உதவியை உடனடியாகவும் கணிசமாகவும் அதிகரிக்க வேண்டும் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்கும் விதத்தில், பயங்கரவாதத்திலிருந்து இஸ்ரேல் தனது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடிக்கோடிட்டுக் காட்டினார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.