< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு
|11 Aug 2023 12:32 AM IST
சீனாவில் முதலீடு செய்வதை குறைக்க அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
சீனாவில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் முதலீடு செய்து வருகின்றனர். இந்தநிலையில் சீனாவில் முதலீட்டை கட்டுப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ஜோபைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
அதன்படி அமெரிக்க முதலீட்டாளர்கள் இனிமேல் சீனாவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது அமெரிக்க கருவூலத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை குறைப்பதற்கான முயற்சி என கூறப்படுகிறது. எனினும் சீனாவில் முதலீடு செய்வதை முற்றிலும் துண்டிக்கும் எண்ணம் இல்லை என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.