< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஏற்றுமதி செய்ய முடியாது: 13 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
|18 Oct 2023 12:45 AM IST
13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்கா, பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதிப்பது உண்டு. சீனா, ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று உத்தரவிட்டு உள்ளது.
'அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவு கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக' கூறி இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கணினி மற்றும் மின்னணு கருவிகளுக்கான சிப் தயாரிப்பு நிறுவனமான மூர் திரெட் இன்டெலிஜென்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.