< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் பெண் மர்மச்சாவு: சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த போலீசாருக்கு தடை
உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பெண் மர்மச்சாவு: சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த போலீசாருக்கு தடை

தினத்தந்தி
|
20 Sept 2023 1:41 AM IST

ஆஸ்திரேலியாவில் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம் போலீசார் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் நியூகாசில் பகுதியில் பெண் ஒருவர் கையில் கோடரி உடன் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். இருப்பினும் கோடரியால் போலீசாரையும் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுஅமைதியை கெடுக்க முயன்ற பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது போலீசார் ரப்பர் குண்டு களை கொண்ட துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டுபிடிக்க முயன்றனர். மார்பில் சுடப்பட்ட அந்த பெண் படுகாயம் அடைந்து தரையில் சரிந்து விழுந்து மயங்கினார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் கிறிஸ்டா கேச் (வயது 47) என தெரிய வந்தது.

உடலை துளைக்காத ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம் போலீசார் மேல் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அங்கு சர்ச்சைகுரிய துப்பாக்கியை பயன்படுத்த போலீசாருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்