< Back
உலக செய்திகள்
குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு; பாலியல் உறவின் போது விழிப்புடன் இருங்கள் - பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
உலக செய்திகள்

குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு; பாலியல் உறவின் போது விழிப்புடன் இருங்கள் - பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
25 Jun 2022 3:10 PM IST

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரிட்டன் குடிமக்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

லண்டன்,

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பிரிட்டன் குடிமக்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த நோய் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினம் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களில் அதிகமாக பரவுகின்றது.

இதுவரை 96 சதவீதம் நோய் பாதிப்பு, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களில் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் சராசரியாக 37 வயது பருவத்தினரே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

உங்களுக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகப்பட்டால், பொதுநிகழ்வுகளுக்குச் செல்லவோ, நண்பர்களைச் சந்திக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ வேண்டாம். மாறாக வீட்டிலேயே இருங்கள். புதிய அல்லது பல பேருடன் பாலியல் உறவுகொள்ளும்போது விழிப்புடன் இருங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பிரிட்டனில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 79 சதவீதம் பேர் லண்டனில் வசிப்பவர்கள் என்றும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட நோய் பாதிப்புகளில் 99 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 5 பேர் மட்டுமே பெண் நோயாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்