< Back
உலக செய்திகள்
சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை - ஐ.நா. சபையில் தீர்மானம்
உலக செய்திகள்

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை - ஐ.நா. சபையில் தீர்மானம்

தினத்தந்தி
|
29 July 2022 11:34 PM IST

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்ற தீர்மானம் ஐ.நா பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவா,

சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓர் எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தற்கு 161 நாடுகள் ஆதரவு அளித்தன. ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா கூட்டமைப்பு உள்ளிட்ட நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானத்தின்படி சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்த தீர்மானத்தின்படி ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை தடுத்து சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலிலை எற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்