< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் 4-வது 'டோஸ்' கொரோனா தடுப்பூசி: கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு செலுத்தப்படுகிறது
|21 Dec 2022 3:51 AM IST
வங்காளதேசத்தில் கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தடுப்பூசியின் 4-வது 'டோஸ்' செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கின. தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அந்த நாட்டின் சுகாதார சேவைகள் இயக்குனரகத்தின் தலைமை இயக்குனர் அஹ்மதுல் கபீர் தொடங்கி வைத்தார்.
தொற்று நோயை ஒழிப்பதற்காக போராடி வரும் முன்கள பணியாளர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4-வது 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளதேசத்தில் இதுவரை 33.9 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.