ஆணுறையில் வாழை பழம்... வாலிபர் செயலால் மருத்துவ உலகமே அதிர்ச்சி
|ஆணுறையில் வாழை பழம் ஒன்றை வைத்து வாலிபர் ஒருவர் செய்த செயலால் மருத்துவ உலகமே அதிர்ச்சி அடைந்து உள்ளது.
பெர்லின்,
அமெரிக்காவின் லோவா நகரில் விசித்திர சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. பாலியல் வாழ்க்கையில் சலிப்பு தட்டிய நபர் ஒருவர் செய்த செயல் மருத்துவ உலகையே அதிர்ச்சி அடைய செய்து உள்ளது என கூறப்படுகிறது.
இதுபற்றி ஜாம் பிரஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில், 34 வயதுடைய அந்த நபருக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஒருசேர வந்து உள்ளது. எந்த உணவையும் அவரால் எடுத்து கொள்ள முடியவில்லை. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழை பழம் ஒன்று இருந்து உள்ளது.
அந்த நபர், ஆணுறைக்குள் வாழை பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டது தெரிய வந்தது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, 3 நாட்கள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். வயிற்றில் இருந்த அந்த வாழை பழத்துடன் கூடிய ஆணுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதன்பின்பே அவரால் வழக்கம்போல் சாப்பிட முடிந்து உள்ளது. பிற விசயங்களிலும் ஈடுபட முடிந்தது.
எனினும், மருத்துவ உலகில் முதன்முறையாக நடந்த இந்த சம்பவம் என மருத்துவ பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மருத்துவ அறிவியலுக்கான கியூரியஸ் என்ற பத்திரிகை இந்த விசயங்கள் பற்றி விவரங்களுடன் பட்டியலிட்டு தனது பதிவுகளில் சேர்த்து உள்ளது.