< Back
உலக செய்திகள்
ரஷ்ய குடியுரிமை பெற்ற தென்கொரிய தொழிலதிபருக்கு தடை - தென்கொரியா அரசு அறிவிப்பு
உலக செய்திகள்

ரஷ்ய குடியுரிமை பெற்ற தென்கொரிய தொழிலதிபருக்கு தடை - தென்கொரியா அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Jun 2023 5:50 AM IST

சோய் சோன் கோன் என்பவர் மீது ஒருதலைப்பட்ச தடைகளை தென்கொரியா அரசு அறிவித்துள்ளது.

சியோல்,

தென்கொரியாவும் வடகொரியாவும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. தென்கொரியா அதிபராக மூன் ஜே இன் பதவியில் இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்புறவு பேணி வந்தார். பின்னர் கடந்த ஆண்டு தென்கொரியா அதிபராக யூன் சக் இயோல் பதவியேற்ற பின் வடகொரியாவை எதிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டின் அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை வடகொரியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இவை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் சோய் சோன் கோன் என்பவர் மீது ஒருதலைப்பட்ச தடைகளை தென்கொரியா அரசு அறிவித்துள்ளது. அவர் தென்கொரியாவை விட்டு வெளியேறி ரஷ்ய நாட்டின் குடியுரிமை பெற்றவர். அங்கேயே நிறுவனம் ஒன்று தொடங்கி ரஷ்யாவின் ஆயுதங்களை வடகொரியா ராணுவத்துக்கு சப்ளை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் வடகொரியாவுக்கு நிதி திரட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவாகின. அதன்பேரில் சோய் சோன் கோன் மீதும் அவர் நிறுவனம் மீதும் தடை விதித்து தென்கொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்