< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்கு தடை - அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைக்கு ரஷியா பதிலடி
|20 May 2023 10:39 PM IST
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷிய அரசு தடை விதித்துள்ளது.
மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. கடந்த ஒராண்டாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் படைகளுடன் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த போரில் சர்வதேச நாடுகள் உக்ரைன் அரசுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
அதே சமயம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன. கடந்த வெள்ளியன்று மேலும் நூற்றுக்கணக்கான ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷியாவுக்குள் நுழைய ரஷிய அரசு தடை விதித்துள்ளது.