< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறப்பு
|11 Jun 2024 11:23 PM IST
படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் அமைந்துள்ளது. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த மார்ச் 26-ந் தேதி சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன்மீது மோதியது. இதில் பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்தன. மேலும் 6 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது. அதனை சரிசெய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதன் மூலம் அங்கு சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டு உள்ளது.