ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மனைவிக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு
|பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆஸ்திரேலியா,
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.
மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.