< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல்; அந்தோனி அல்பானீஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தல்; அந்தோனி அல்பானீஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை

தினத்தந்தி
|
21 May 2022 7:18 PM IST

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று(மே 21) நடைபெற்று வருகிறது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அவுஸ்திரேலியாவில் ஆட்சியை கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வெற்றிப்பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் முலம் அந்தோனி அல்பானீஸ் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்