< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவிடம் இருந்து ரூ.54 ஆயிரம் கோடி போர்விமானங்களை வாங்கும் ஆஸ்திரேலியா..!
|25 July 2023 1:52 AM IST
அமெரிக்காவிடம் இருந்து ரூ.54 ஆயிரம் கோடி போர்விமானங்களை ஆஸ்திரேலியா வாங்க உள்ளது.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆஸ்திரேலிய கடற்கரையில் கூட்டுப்போர்ப்பயிற்சியை நடத்தி வருகின்றன. இந்த வருடம் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 புதிய சி-30 ஹெர்குலஸ் விமானங்களை ஆஸ்திரேலியா வாங்குவதாக அறிவித்துள்ளது. 4 என்ஜின்கள் கொண்ட இந்த முதல் ஹெர்குலஸ் விமானம் வருகிற 2027-ம் ஆண்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் விமானப்படைக்கான திறன், இயக்கம் போன்றவற்றில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என அந்த நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பாட் கான்ராய் தெரிவித்தார்.