< Back
உலக செய்திகள்
ஆஸ்திரேலியா: உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிச்சென்ற சிங்கங்கள்- மக்களுக்கு எச்சரிக்கை
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: உயிரியல் பூங்காவிலிருந்து தப்பிச்சென்ற சிங்கங்கள்- மக்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
2 Dec 2022 8:57 PM IST

ஆஸ்திரேலியாவின் சிட்னி உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்கள் தப்பிச் சென்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கடந்த நவம்பரில் 5 சிங்கங்களும் கூண்டில் இருந்து வெளியேறி தப்பியோடியது இதனால் பெரும் பதற்றம் உருவானது.

இதனை தொடர்ந்து உயிரியல் பூங்காவில் முதலாம் எண் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டது. குடில் அமைத்து தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் 50 நொடிகளில் அந்த இடத்தை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் ஆண் சிங்கமும், மூன்று குட்டிகளும் 10 நிமிடங்களில் கூண்டிற்கு வந்துவிட்டன. எஞ்சிய ஒரு சிங்கக்குட்டி மயக்க ஊசி மூலம் பிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், சிங்கங்கள் தப்பிச் சென்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்