< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
`எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலியா
|17 Oct 2023 5:08 AM IST
ஆஸ்திரேலியாவில் `எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
கான்பெரா,
ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் மற்றும் சட்ட விரோத பதிவுகளை சமூகவலைதளமான எக்ஸ் (டுவிட்டர்) சரியாக கையாளவில்லை என அதன் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டது.
குறிப்பாக பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான பதிவுகளை எவ்வாறு கையாண்டது என எக்ஸ் நிறுவனம் முழுமையாக விளக்கம் அளிக்கவில்லை. இதனால் எக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து எக்ஸ் நிறுவனம், ஆஸ்திரேலியாவின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என கூறப்படுகிறது.