ஐநாவில் காஷ்மீர் பிரச்சினயை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி
|அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
ஜெனிவா,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்திக்கிறது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்த அவை கண்டிக்க வேண்டும். ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்த நாடு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்தார்.