< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது மோதிய கார் - 9 பேர் பலி
|2 July 2024 11:16 AM IST
சாலையை கடக்க காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
சியோல்,
தென்கொரியா தலைநகர் சியோலின் பரபரப்பான சாலையில் நேற்று இரவு பயங்கர விபத்து ஏற்பட்டது.
சியோலின் சிட்டி ஹால் நகரின் முக்கிய சந்திப்பில் சாலையை கடக்க சிக்னலுக்காக மக்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையின் மறுபுறம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார், சாலையை கடந்த காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய 60 வயதான நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கார் திடீரென வேகமாக சென்றதாகவும், பிரேக் செயல்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.