< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசல் - 9 பேர் பலி

தினத்தந்தி
|
21 May 2023 11:24 AM IST

கால்பந்து மைதானத்தின் நுழைவு வாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

சன் சல்வடோர்,

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு எல் சல்வடோர். இந்நாட்டில் சல்வடோர் லீக் என்ற பெயரில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த கால்பந்து தொடரில் நேற்று காலிறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற விருந்தது. இதில், அலியன்சா - எப்ஏஎஸ் மோதவிருந்தன.

அந்நாட்டின் கஸ்கட்லன் நகரில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெறவிருந்த நிலையில் போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மைதானத்திற்குள் செல்ல ரசிகர்கள் வேகவேகமாக நுழைவாயிலில் திரண்டனர்.

அப்போது ஒரு நுழைவாயிலில் கூட்ட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது சக ரசிகர்கள் ஏறி நடந்து சென்றனர். இந்த கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மூச்சு திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில் கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்