< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 63 பேர் பலி
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 63 பேர் பலி

தினத்தந்தி
|
17 Aug 2023 4:01 PM IST

ஆப்பிரிக்காவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 பேர் உயிரிழந்தனர்.

லாகோஸ்,

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழப்பது தொடர் நிகழ்வாக உள்ளது.

அந்தவகையில், செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி படகில் புறப்பட்டு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்ததால் அதில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு கவசம் இல்லாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 56 பேரின் உடல்களை மீட்டதுடன் 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்