< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சந்தைக்குள் அதிவேகமாக புகுந்த லாரி - 51 பேர் பலி
|1 July 2023 2:53 PM IST
சந்தைக்குள் அதிவேகமாக லாரி புகுந்த விபத்துக்குள்ளான சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
நெய்ரொபி,
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கெய்னா. அந்நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைகுள் புகுந்தது. சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லாரி வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. விபத்து நடந்த கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.