< Back
உலக செய்திகள்
ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
உலக செய்திகள்

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தினத்தந்தி
|
3 July 2022 5:56 AM IST

ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர்.

தெஹ்ரான்,

ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1, 6.3 என நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும்பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்