< Back
உலக செய்திகள்
சீனா:  ரசாயன ஆலையில் திடீர் வெடி விபத்து... 5 பேர் உயிரிழப்பு.!
உலக செய்திகள்

சீனா: ரசாயன ஆலையில் திடீர் வெடி விபத்து... 5 பேர் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
2 May 2023 2:24 AM IST

காயமடைந்த நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பெய்ஜிங்,

சீனாவின் லியாசெங், ஷான்டாங் மாகாணத்தில் இரசாயன ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவரை கானவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த வெடி விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்