< Back
உலக செய்திகள்
அமெரிக்காவை தாக்கிய புயல் - 5 பேர் பலி
உலக செய்திகள்

அமெரிக்காவை தாக்கிய புயல் - 5 பேர் பலி

தினத்தந்தி
|
26 May 2024 8:17 PM IST

அமெரிக்காவை தாக்கிய புயலில் 5 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை இன்று புயல் தாக்கியது. அம்மாகாணத்தின் டெண்டன் நகரில் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

புயல் காற்றில் வீடுகள் சூறையாடப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில், புயலில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். புயல் தாக்கிய பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்