< Back
உலக செய்திகள்
ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு - 4 பேர் பலி
உலக செய்திகள்

ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு - 4 பேர் பலி

தினத்தந்தி
|
4 Sept 2024 11:48 PM IST

ஜியார்ஜியாவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் , அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன.

மேலும் செய்திகள்